ஓவியம்

படமொழி – 3: ஓரத்தில் உட்கார், அன்பு மகளே

< 1 நிமிட வாசிப்பு

“ஓர் ஓரத்தில் உட்கார், அன்பு மகளே. நீ நள்ளவளாய் இருந்தால், கண்டடையப்படுவாய்.” இந்தப் பழமொழியின் வரிகள் செக் மொழியில் ஓசை நயத்துடன் இருக்கும் (“Sedávej panenko v koutě, když budeš hodná, najdou tě.”) இதை ஓவியமாக தீட்டுகிறார் உனாகா.

வழக்கொழிந்துபோன செக் பழமொழிகளைத் தேடத் தொடங்கியபோது, சிறு வயதில் என் காதில் விழுந்த பழஞ்சொற்கள்தான் முதலில் கவனத்துக்கு வந்தன. அவற்றில் ஆழ்ந்தபோது எனக்கு ஒன்று தெளிவாகியது: அவை ஆணாதிக்கக் கலாச்சாரத்தினை முன்னிறுத்தும் வகையில் பின்னப்பட்ட வரிகள். அடுத்த சில இதழ்களுக்குப் போதுமான அளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன!

இதுவொரு நல்லெண்ணத்தில் சொல்லப்படும் அறிவுரை — “ஓர் ஓரத்தில் உட்கார், அன்பு மகளே. நீ நள்ளவளாய் இருந்தால், கண்டடையப்படுவாய்.” குறிப்பாக, உன்னை நோக்கிக் கவனத்தை ஈர்க்க முனையாதே. உனது நற்குணங்களைப் பட்டியலிடாதே. நிச்சயம் அவை கவனம் பெறாமல் போகாது. அமைதியாய் அமர்ந்திரு, எந்த ஆசையும் உனக்கு வேண்டாம், எந்தக் குளறுபடியும் செய்யாமல் இரு. இன்றோ நாளையோ நிச்சயம் ஒருவன் வருவான், உனது குணங்களைக் கவனிப்பான். எப்படியும் இது நிகழும், ஓர் அதிசயம் போல.

சிறு வயதிலேயே இந்தப் பழமொழியை நான் சந்தேகத்துடனேயே பார்த்தேன். இன்றும் எனக்கு இருக்கும் சந்தேகம்: ஓரத்தில் காத்துக்கிடக்கிறாள் என்பதே யாருக்கும் தெரியவராதபோது, அந்த அன்பு மகள் எவ்வாறு கண்டடையப்படுவாள்? அவள் அமைதியாக அமர்ந்திருந்தால், எதுவுமே பேசாமல் இருந்தால், அவள் நல்லவள் என எப்படித் தெரியவரும்? 

இந்தப் பழமொழி என் மனதில் உருவாக்கிய சித்திரம் — தனித்திருக்கும் சலிப்படைந்த பெண், கண்டடையப்படுவதற்குக் காத்திருக்கிறாள். அவள் தொலைந்துவிட்டதைக்கூட அறிந்திராத உலகம் அவளைக் கடந்து செல்கிறது.


உனாகாவின் ‘படமொழி’ ஓவியத்தொடர்:
உனாகா

உனாகா காமிக்ஸ் வரைகிறார். ஏன்? அதை ரசித்துச் செய்கிறார்! சில சிறுகதைகள் எழுதி வருகிறார். அவற்றை வெகு விரைவில் அவருடைய இன்ஸ்டாகிராமில் காணலாம். https://www.instagram.com/unaka.grafika/

Share
Published by
உனாகா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago