சிறுகதை

மேய்ப்பன்

8 நிமிட வாசிப்பு

லாவண்யா தனது கருப்பு நிறக் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள். காரை நகர்த்திச் சாலையை அடைந்ததும் ‘எஸ்கார்ட்’ என எழுதி இருந்த பொத்தானை அழுத்தினாள். பக்கத்து இருக்கையில் லேசரின் மெல்லிய ஒளியில் கோட்டோவியம் போன்ற ஓர் ஆண் உருவம் தோன்றியது. ஐம்பது வயதிருக்கும் ஓர் ஆள். கோட் சூட் அணிந்த உருவம்.

“குட் மார்னிங் லாவண்யா.”

“குட் மார்னிங் எஸ்கார்ட். வாட் ஈஸ் த நியூஸ்?”

“டேட்டிங்கு யார் யாரு இருக்காங்கனு ஒரு லிஸ்ட் அப்டேட் ஆகியிருக்கு. சீக்கிரமே புக் பண்ணினா வாரக் கடைசியில உறுதியா உங்க சாய்ஸ் பார்ட்னரோட ஒன்னா இருக்கலாம்.”

”எஸ்கார்ட். நா அதை சர்ச் பண்ணி நாளாச்சு. இப்ப எதுக்கு? காலை நேரத்தில் என்ன இது?”

“மெமரியில் அப்டித்தான் இருக்குது. அடுத்த நியூஸ் ஜெனிவாலே பெரும்பான்மை நாடுகள் ஒரு தொழில் நுட்பம் முதல் மூன்று மாதங்களில் உபயோகிப்பாளர் தரும் சார்பு அல்லது எதிர்க் குறிப்புகளை வைத்து மட்டுமே கண்காணிக்கப்படும். தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் முடிய காலம் ஆகும் என்பதால் உபயோகிப்பாளர் எந்தப் பாதிப்பையும் சந்திக்காதபோது அதுவே போதுமானது.”

“இது என் ப்ராஜெட்க்ட்டுக்கு ஒத்துப் போகிற உபயோகமான நியூஸ்.”

“காடுகள்ல இனி வாரக் கடைசில மட்டுமில்ல, நிறைய நாளே தங்கலாம். அதாவது ஒர்க் ஸ்டேஷன்ஸுக்குத் தேவையான சாட்டிலைட் கனெட்டிவிட்டி ட்ரோன்ஸ் ஸ்டேஷனரியாத் தரும். முன்னாடியே புக் பண்ணிக்கணும்.”

பழைய மகாபலிபுரம் சாலை. அந்த பிரம்மாண்ட கட்டடத்தின் முன்வாயிலின் இரு இரும்புக் கதவுகளும் இணைந்து மூடியிருந்தன. காவலாளிகள் யாரும் இல்லை. சாலையில் புகையில்லாமல் கார், பஸ், இரு சக்கரம் என வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சுற்றுச்சுவருக்கு இணையாக இரு கதவுகளும் பத்தடி உயரமாய் இருந்தன. கதவுகளின் மையத்தில் கைப்பிடி இருக்க வேண்டிய இடத்தில் ஒன்று முதல் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகிய பத்து எண்கள் இருக்கும் ஒரு சதுரத்துக்குள் தென்பட்டன. மழமழவென இருந்த சுவர் மற்றும் கதவுகளைப் பற்றி ஏறுவதற்கு அந்தக் குரங்குக்குப் பிடிமானம் ஏதும் இல்லை. அதன் வயிற்றின் கீழே உடல், முதுகைச் சுற்றிக் கைகள் ஆக அதன் குட்டி தொங்கிக் கொண்டிருந்தது. பாதையோர நடைமேடை மீது அமர்ந்தபடி அது காத்துக் கொண்டிருந்தது. முதலில் சிவப்பு நிற சின்னஞ்சிறு கார் வந்தது. ஓட்டுநர் பக்கக் கண்ணாடி இறங்கியது. அதிலிருந்து நீண்ட கை ஒரு ‘ரிமோட்’டை அழுத்தியது சதுரப் பலகையில் எண்கள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன. நேரம் 10.05 நாள் 1.8.2054. இருபக்கக் கதவுகளும் திறந்தன. குரங்கு காரின் பின்னே நடந்து போனது. கார் நுழையும் வரை காத்திருந்தது. கார் நுழைந்த மறுகணம் கதவுகள் வெகு வேகமாக நகர்ந்து மூடுவதைப் பார்த்துப் பின் வாங்கியது. அடுத்தடுத்து சிறிய கார்கள் பலவும் அதே போல் நுழைந்தன. குரங்கு வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்தது. கருப்பு நிறப் பெரிய கார் ஒன்றின் சக்கரங்களுக்குச் சற்று மேல் நான்கு புறமும் தடிமனான வெள்ளி நிறக் குழாய் இருந்தது. கார் நின்று, பின்னர் நகரும் இடைவெளியில் குரங்கு காரின் பின்பக்கம் அந்தக் குழாயில் இரு கைகளைப் பற்றித் தொற்றித் தொங்கியது. கார் நின்றதும் இறங்கி உணவின் நறுமணம் எங்கே இருந்து வருகிறது என்று தேடித் தாவி நகர்ந்தது.

லாவண்யா அந்த வளாகத்தின் பத்தாவது தளத்தில் தனது அறையில் கைப்பையை வைத்த பின் கருத்தரங்கக் கூடத்துக்கு நகர்வதைப் பார்த்ததும் தம் இருக்கைகளில் இருந்து அவளது உதவியாளர்கள் கூட்ட அரங்கத்தை அடைந்தார்கள்.

“ப்ளீஸ் அப்டேட்.”

ஒவ்வொருவராகத் தாம் தேடிப் பிடித்த தன்னார்வம் உள்ள சோதனைக் கூட்டாளிகள் பற்றி விளக்கினார்கள். சிலர் ஓர் ஆளைத்தான் கொண்டு வந்திருந்தார்கள். சிலர் இரண்டு. மொத்தம் பதினோரு ஆட்கள் லாவண்யாவின் இறுதித் தேர்வுக்காகக் காத்திருந்தார்கள்.

பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட முதல் தன்னார்வக் கூட்டாளியை நேர்காணல் செய்யும் முன் லாவண்யா தனது கைபேசியைப் பரிசோதிப்பதில் ஆழ்ந்தாள். கதிரவன் இன்று தனக்கு வெற்றி நாள், கூடிய சீக்கிரம் பேச வேண்டும் என்றும் இரவு உணவுடன் சந்திப்போமோ என்றும் கேட்டிருந்தான். மிகவும் அவசரமாக அவன் இந்த அணுசக்தி பிராஜக்ட்டில் இருந்து வெளியேறினான். இப்போது தனி நபர் பயன்பாட்டுச் செயலிகளில் ஆழ்ந்திருக்கிறான். இரவு படுக்கையில் பேசிக் கொண்டிருந்த போதெல்லாம் எதுவும் சொல்லவில்லை. காலையில் அவள் எழுந்தபோதுதான் வேறு நிறுவனம் போகிறேன் என்று ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அதை அவள் கைபேசிக்குக் கீழே வைத்துப் போயிருந்தான். அதெல்லாம் எப்போதோ நடந்தவை என்று அவன் விட்டிருக்கலாம். முற்றிலும் மறந்தே போயிருக்கலாம்.

முதலில் நேர்காணலுக்கு உள்ளே நுழைந்தவர் சுசித்ரா. சுமார் நாற்பது வயது இருக்கும். “பரிசோதனை என்ன மாதிரி ஆபத்து சாத்தியங்கள் உள்ளனவென்று உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் மிஸ்.லாவண்யா. நான் ஆல்டர்னேடிவ் ஸோர்ஸஸ் ஆஃப் எனர்ஜியிலே நியுகிலியர் சயன்ஸ்ல டாக்டரெட் பண்ணிருக்கேன்.”

”இருந்தாலும் லேசான கதிர்வீச்சு இருக்கும். லாஸ் வேகாஸ் கிட்டே பாலைவனத்தில் சிமுலேஷனுக்கு மரம், கட்டிடம், மரபணு மாதிரிகள் வெச்சு செஞ்ச தோல் இருக்கிற ரோபோஸ், அதே போல் மிருகங்கள், பறவைகள் எல்லாமே இருக்கும். உங்க கவசம் கண்டிப்பா உங்களைக் கதிர்வீச்சிலே இருந்து பாதுகாக்கும். ஆனா அந்த அழிவு, எரியும் மனிதத் தோல் ரோபோஸ், பறவைகள், மிருகங்கள் பார்க்கறத்துக்கு ரொம்பக் கொடுமையா இருக்கலாம். பெரு நெருப்பு உங்களைச் சுத்தி எரியும். உங்களுக்குக் கவசம், ஆக்ஸிஜன் மாஸ்க், ஷூஸ் பாதுகாப்பு. ஆனா உங்கள் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். உங்க அண்டர்டேகிங் சட்டப்படி போதும். ஆனா நாங்க உங்க மேலே அக்கறையோட எச்சரிக்க விரும்பறோம்.”

“ட்ராமா எக்ஸ்போசர் லாப்க்கு நான் வாலண்டியரா போயிருக்கேன்.”

“என்ன மாதிரி ட்ராமா?”

“பிண அறையிலே அரைமணி நேரம் இருந்திருக்கேன். ஒரு மெண்டல் அசைலம் செஞ்ச எக்ஸ்பரிமெண்ட்ஸ்க்கு நான் வாலண்டியர் பண்ணி இருக்கேன். சித்திரவதை, பாலியல் பலாத்கார வீடியோஸைப் பார்த்து அதனால் என்ன பாதிப்பு எனக்கு வந்துதுன்னு எழுதிக் கொடுத்தேன். எனக்கு ஆடோ சஜெஷன் பயிற்சியாலே மனோபலம் அதிகம்.”

சிறு குறிப்புகளை எடுத்தபடியே லாவண்யா, “யார் கிட்டேயாவது கன்சல்ட் பண்ணினீங்களா?”

“யா. எக்ஸ்பர்ட்கிட்டே.”

“குட். சைக்கியாட்ரிஸ்ட்டா?”

“ஆமாம். அவனுக்குள்ளே அட்வான்ஸ்ட் சைக்கியாட்ரி இண்டெலிஜென்ஸ் சிப் இருக்கு.”

“சிப்? யூ மீன் ரோபோ? மெடல் அண்ட் ஃபைபர் ஆர் ஜெனடிக்கல்லி ஸ்கிண்ட்?”

“சிலிகான் சதை தோல் எல்லாம் இருக்கிற மூளையும் உணர்ச்சியும் வேலை செய்யற காஸ்ட்லி ரோபோ அவன். மிச்ச ஆம்பிளைங்களுக்கு அவன் கிஸ் எப்படி பண்ணனும் ஃபக் எப்படிப் பண்ணனும்னு சொல்லித்தர முடியும். ஆர்காசம் இல்லாம நான் அவன் கிட்டே செக்ஸ் வெச்சதே இல்லே.”

இந்த விஷயத்தை அவள் எடுத்ததும் தன்னுள் வந்த எரிச்சலை மறைத்தபடி “நீங்க நிஜ மனுஷங்க, உங்களை நேசிக்கிறவங்க கிட்டே பேசினீங்களான்னு கேட்டேன்.”

”நேசம்கிற வார்த்தை போன மில்லேன்னியத்தோட காலாவதியானது. படுக்கையிலே மட்டும்தான் காது கொடுப்பான் ஆம்பளை. என் ரோபோ நான் எப்போ என்ன பேசினாலும் கேப்பான். என் ட்ரீம்ஸ் என் பேரெண்ட்ஸுக்குப் புரியாது. அவங்க ‘சிமுலேடட் வர்ட்சுவல் டூர்’ இருக்கிற மால்களிலே போய் உலகத்தோட வெவ்வேற மலை காடு, பொக்கிஷக் கட்டிடங்களுன்னு டுரீஸ்ட் ஸ்பாட்டிலேயே இருந்த மாதிரி ஃபீல் பண்றதிலே பிஸி.” அலுப்படித்தது. விரைவில் தேர்வானாரா இல்லையா என்று தெரிவிக்கிறேன் என்ற லாவண்யா அடுத்தடுத்தவர்களை நேர்காணல் செய்தாள். அணுகுண்டு வெடித்த யுத்தம் கடந்த ஆண்டு செய்த அழிவுக்குப் பின் இந்தக் கவசம் உலகெங்கும் விற்கப் போகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அந்தப் புரட்சிகரமான கண்டுபிடிப்பின் சோதனையில் தாம் பங்கெடுப்பதில் பெருமையும் இருந்தது. ஐந்து லட்சம் டாலர் என்னும் சன்மானத்தின் மீது பேராசையும் தென்பட்டது. நான்காவது ஆளை அவள் விசாரித்து முடிக்கும்போது மணி இரண்டு. சாப்பிட்டுக் கைகழுவும் போது ஜன்னல் வழியே பர்கர், பீட்சா, வாழைப்பழத் தோல் என மீந்தவற்றை சாப்பிடும் குட்டியுடனான பெண் குரங்கு தென்பட்டது. இந்த வளாகத்துக்குள் அது எப்படி நுழைந்தது?

”சார். புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளைப் படிச்சிட்டீங்களா?” தன் எதிரே இருக்கும் அரசு உயர் அதிகாரியிடம் கதிரவன் மெல்லிய குரலில் கேட்டான்.

“படிச்ச அப்பறம்தான் உங்க மீட்டிங்க்குக்கு வந்திருக்கேன், கதிரவன்.”

”சார் எங்க சாஃப்ட்வேர் முதல் ஒரு வருஷத்துக்குத் தான் ஃப்ரீ. அதுவும் சாஃப்ட்வேர் மட்டும்தான். கைவிரல் ரேகை மெசின் நாங்க தர மாட்டோம். டெண்டருக்கும் வர மாட்டோம். இதிலே புது பயன்பாடு எது கேட்டாலும் முதல் வருஷத்திலே கேட்டாலும் நாங்க சார்ஜ் பண்ணுவோம்.”

“கதிரவன், நெக்ஸ்ட் இயர் எலெக்‌ஷன் வருது. கட்டை விரலை ஒரு மெஷின்லே வெச்சா எல்லாமே சாத்தியம்கிறது மினிஸ்டருக்கு ரொம்ப அப்பீலிங்கா இருக்கு. ஒரு குடிமகனுக்கு என்னென்ன கிடைக்க வேண்டியது பாக்கி இருக்கு, மத்திய அரசா மாநில அரசா, எந்த அலுவலகம், அவர் புகார் அல்லது கோரிக்கை எந்த நிலையிலே இருக்கு எல்லாமே கை விரல் வெச்ச உடனே வந்து விழும்கிறது தன்னோட பார்ட்டிக்குப் பெரிய அளவு ஓட்டு வாங்கித்தரும்னு அவரு நம்பறாரு.”

சில கணங்கள் மௌனித்த பின், “யூஎஸ்லே இருந்து டாப் லெவல் டீம் மீட்டிங்க்கு வரும் போது மினிஸ்டர் எம்ஓயூ சைன் பண்ணுவாரா? நானே அவரை நேரில் இதைக் கேட்கலாமா?” என்றான்.

“ஷ்யூர். நான் அவரை நீங்க சந்திக்க ஏற்பாடு செய்யறேன்.” என்றார்.

மாலை வரை கருப்புக் காரின் பின்னேயே காத்திருந்தது குரங்கு தன் குட்டியுடன். லாவண்யா காரைக் கிளப்பிய உடனே அதன் பின் கம்பியில் தொற்றிக்கொண்ட து. கார் முன் வாயிலைக் கடந்ததும் கீழே குதித்து சாலை ஓர நடைமேடையில் சுவரை ஒட்டி குந்தி அமர்ந்துகொண்டது,

அடையார் புகாரி வாசலில் காத்திருந்தான் கதிரவன். கைகுலுக்கி, மெலிதாகக் கட்டி அணைத்தவன் “பக்கத்திலேயே ஒரு டெரெஸ் கார்டன் பாக்கலாமா?”

எதுக்கு என்று கேட்க நினைத்தவள் இங்கிதத்துக்காக சரியென்று தலை அசைத்தாள். அவனுடைய காரில் காந்திநகர் நான்காம் பிரதான சாலையை அடைந்தார்கள். ஒரு குடியிருப்பின் நான்காம் மாடிக்கும் மேலே இருக்கும் மொட்டை மாடி. குறுக்குச் சுவர்களைக் கொண்ட இரண்டாயிரம் சதுர அடிக்கும் அதிகமாய் விரிந்திருந்தது. கடற்காற்று பகலில் உஷ்ணத்துக்கு மருந்து போல மேலே வருடிச் சென்றது. இரவு கவிந்து கொண்டிருந்தது. இங்கும் அங்குமாக ஏகப்பட்ட செடிகள் என்ன செடிகள் என்று தெரியவில்லை. பச்சை வாசனை ஈர்த்தது. ஒரு குறுக்குச் சுவர் மீது பச்சை நிற ஒளி சில நொடி இடைவெளிகளில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தது. அதன் அருகே சென்று “லைட்ஸ் ப்ளீஸ்” என்றான் கதிரவன். மாடி முழுதும் நூறு விளக்குகள் சில நொடிகளில் ஒளிர்ந்தன. நெல், கரும்பு, கத்திரிக்காய், வாழை, புடலங்காய்க் கொடி, தக்காளி என எல்லாவித உணவு வகைகளும் இருந்தன. ஒரு கதிர் ஐந்தடி உயரம், அதில் நெல்மணிகள் பல நூறு. ஒரு கிளையில் ஐம்பது தக்காளி.

“ஜெனெடிக்கல்லி மாடிஃபைட். இது லாஸ்ட் சென்சுரிலே இருந்ததே தினகர்,” என்றாள்.

“ஐ டூ அக்ரி. ஆனா இப்போ இங்கே இது கொடுக்கற யீல்ட் ஒன் ஹண்ட்ரட் டைம்ஸ். இந்த பில்டிங்ல இருபது பிளாட்ஸ். அவங்களுக்கு வருஷத்திலே பாதி மாசம் இங்கேயே எல்லாம் கிடைக்குது. மண் மாத்தி பயிர் சுழற்சி பண்ண ஒரு மூணு மாசம் இடைவெளி. மழைக்காலம் ஒரு மூணுமாசம். மிச்ச ஆறு மாசமும் இங்கே நல்ல விளைச்சல்.”

“யாரோட ஜெனடிக் ரிசர்ச் இது?”

“என்னோடது லாவண்யா.”

அவள் கண்கள் விரிந்தன. அவன் தனி நபர்ப் பயன்பாடு மற்றும் ஆளுமைத் துணைக்கானவற்றைத்தான் செய்து வருகிறான் என்றே அவள் நம்பி வந்திருந்தாள்.

புகாரியில் அவர்களுடன் உணவு உண்ணச் சற்றே தடிமனான ஒருவர் வந்திருந்தார். இவர்களது எதிரே உள்ள இரண்டு நாற்காலிகளையும் அவர் ஆக்கிரமித்திருந்தார். சுரேந்தர் அவர் பெயர். அவர் தனது தட்டுக்கு அருகே தன் கைப்பையில் இருந்த ஒரு மெல்லிய பிளாஸ்டிக் போன்ற தாளை விரித்து வைத்தார். ஏ4 அளவு இருந்த அது. அவர் அதன் மேற்பக்க மத்தியில் விரலை வைத்து அழுத்தியதும் ஒளி பெற்றது. “ஹாய் சுரேந்தர். இரவு உணவு நேரம் என்றது ஒரு அழகிய பெண்முகம்.” அவர் ‘தேங்க்ஸ்’ என்றதும் மறைந்துவிட்டது. உணவுப் பட்டியலை அவர் அதன் மேல் காட்டிய சில நொடிகளில் “உடல் எடை குறைய, சூப், மீன் குருமா மற்றும் இரண்டு சப்பாத்தி மட்டுமே,” என்றது அது.

பொருள் பொதிந்த அவள் பார்வையை அவன் புரிந்துகொண்டான். “ஒபிசிடிக்கு மட்டுமில்லே லாவண்யா. மீட்டிங்லே இதைப் பக்கத்திலே வெச்சிக்கிட்டா குரல் உயர்ந்தாலே ‘கூல்’னு மெல்லிசா ரிமைண்ட் பண்ணும். பசங்க தூங்கற வரைக்கும் கதை சொல்லும். தனியா இருக்கிற ஓல்ட் பீப்பிளோடப் பேசி தனிமையைப் போக்கும். அவங்க மருந்து சாப்பிடற நேரத்தை ஞாபகப்படுத்தும். குடிக்கிறவங்க மூணாவது பெக் அடிச்சா பெரிய சைரன் ஒலி எழுப்பி அவங்களைத் திணற அடிச்சிடும். இப்படி வெரைட்டியோட வேற ஆப் வித் ரோபாடிக்ஸ் எதுவும் கிடையாது. மேய்ப்பன்னு பேரு வெச்சு பேட்டண்ட் எடுத்துட்டோம்.”

இதெல்லாம் சுண்டுவிரல் விளையாட்டு போல அவனுக்கு. எந்த மென்பொருளையும் விரைவாய் நுட்பமாய்க் கற்பனையாய்ச் சரியாய்த் துல்லியமாய் எழுதுவான். பழுதான எந்த மென்பொருளையும் ஆய்ந்து சரி செய்துவிடுவான். எமகாதகன். அவளுடைய முதல் வேலை போக இருந்த நேரம். ஒரே இரவில் அவன் அவளுடன் அமர்ந்து அவள் ஒரு மாதம் உழைத்து உருவாக்கிய மென்பொருளில் இருந்த குறைகளைச் சரி செய்தான். அழாதே என நெற்றியில் முத்தமிட்டான். பல இரவுகள் இருவரும் அன்பாய்க் காமமாய்ச் சொந்தமாய் இருந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக அவன் தனி நபர்ப் பயன்பாடு மற்றும் மரபணுத் தடத்துக்குப் போய்விட்டான். அவனுக்குப் பிடித்த கோழி 65, ப்ரைட் ரைஸ், ஆட்டுக்கால் சூப், மட்டன் குருமா இவற்றை அவள் தருவித்தாள்.

உணவு முடிந்த பின் சுரேந்தர் விடை பெற்றார். தனித்தனி காரில் இல்லாமல் இருந்திருந்தால் நீண்ட இடைவெளி விஷயங்கள் பலதையும் அவனுடன் பகிர்ந்திருக்கலாமோ? முழு இரவு இருக்கிறது. குரலில் வராமல் குறுஞ்செய்தி செய்யும் அவனுடன் ஒரு முழு இரவு. அவளுடைய குடியிருப்புக்கு முன் வாயிலில் அவள் தனது கடவுச்சொல் வழி கதவைத் திறந்து தனது காரைச் செலுத்தியபோது அவன் வண்டி பின்னேயே வராத போது அவளுக்குத் திடுக்கென்றிருந்தது. கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் காரைச் செலுத்திக் காணாமற் போனான்.

மெல்லிய நீல விளக்கில் அவன் படுக்கையில் சாய்ந்தான். ரிமோட்டை அழுத்த அறையின் மூலையில் ஒரு நின்றிருந்த பெண் ரோபோ வந்தது. படுக்கையில் அமர்ந்தது. பிடித்து இழுத்தான். அதன் மேலே அவன் சுற்றி வைத்திருந்த துணியை அகற்றினான். பெரிய மார்பகங்கள். மெல்லிய இடுப்பு. பெரிய தொடைகள். உடலில் பல இடுக்குகளில் முடியும் இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டான். வெட்கத்தில் அது நெளிந்தது. வெள்ளை நிற உடலெங்கும் செந்நிறம் படர்ந்தது. வலது மார்பைக் கையால் பிடித்து அழுத்தினான். கையைத் தட்டிவிட்டது. தொடைக்கு இடையே போன கையையும் மென்மையாய்த் தடுத்தது. ரிமோட்டை எடுத்து ‘வெறி’ எனும் பொத்தானை அழுத்தினான். மறுகணம் அது அவன் மீது ஏறி அவன் உதடுகளைக் கவ்வி அழுத்தி முத்தமிட்டது. இரு கைகளாலும் அவன் தலை முடியைப் பற்றியது. பின்னர் ஒரு மார்பை அவன் வாய் மீது வைத்து அழுத்தியது.

சத்யானந்தன்

தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய (தேனீ) மேடை விருதுகள் 2019-இல் பாரதிதாசன் நினைவு-மூத்த படைப்பாளர் விருதைப் பெற்றுள்ள கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி) இருபத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகத் எழுதி வருகிறார். சத்யானந்தன் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய Shoulders என்ற சிறுகதை HydRaWவின் 2020 ஆண்டுத்தொகுப்பிற்குத் தேர்வாகிச் சேர்க்கப்பட்டது. நவீனப் புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைக்கும் இவரது 'தப்பு தான்' சிறுகதை போடி மாலன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2019-இல் இரண்டாம் பரிசை வென்றது. 2019-இல் வெளியான காலச்சுவடின் 'தாடங்கம்' சிறுகதைத் தொகுதி உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் புதிய தடங்களைக் கண்டதற்காக கவனம் பெற்றுக் காலச்சுவடின் வெளியீடான 'தாடங்கம்' சரவணன் மாணிக்கவாசகத்தின் நூறு நூல்களுள் இடம் பெற்றுள்ளது. புது பஸ்டாண்ட் நாவல் 2020ன் கவித்துவமும் நவீனத்துவமான வடிவத்துக்கான நாவலாகக் கவனம் பெற்றது. இவரது 'சிறகுகளின் சொற்கள்' சிறுகதையின் ஆங்கில வடிவம் உலகளாவியத் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பான Unwinding-இல் சேர்க்கப்பட்டது.

View Comments

  • அருமை. 2054 - ல் சொல்லப்படும் அறிவியல் முன்னேற்றம், சமுதாய மாற்றம் குறித்த கற்பனை நடக்கவே முடியாத ஒன்றல்ல. இன்னும் 50 ஆண்டுகள் தள்ளி நடக்கலாம்.

Share
Published by
சத்யானந்தன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago