பூரான்களை நீ அடக்குவதேயில்லை
அதன் போக்கிற்கு அலைகின்றன
மேஜை
போன்சாய்
ஒயின் கோப்பைக் கைபிடியென சகலமும்
இரண்டு பூரான்கள் கூடுவதைப் பார்த்து
சமிக்ஞையிடுகிறாய்
எனக்கு எந்தக் கிளர்சியுமில்லை என்றேன்
அப்பட்டமான பொய்தான் அது
வீட்டின் எல்லா பூரான்களின்
குறிகளையும் வெட்ட வேண்டுமென்று கத்தினாய்
நல்ல பதட்டமான சொல்லது
உன் கோபத்தை மீட்டெடுக்க
ஒரு கூடலை உதாசீனப்படுத்தினால் போதுமானது.
என்னால் சில விஷயங்களை
எப்போதுமே செய்ய முடியாது அதிலும்
உன் பூரான்களுக்குச் சமைப்பது
அவைகளுக்குக் கிச்சடி பிடிப்பதில்லை
பயணநேரங்களில் கார் கார்பரேட்டர் வரை
நுழைந்துவிடுகின்றன
காதுகளைக் கீறுகின்றன
பாதங்களில் சறுக்காடுகின்றன
நீ அவைகளை அடக்குவதேயில்லை
எதையாவது இழுத்துக் கதவிடுக்கில்
புதைப்பது போல் பேசினால் உடனே
தைக்கப்படாத பேண்ட் ஜிப்பைப்
போலத் தரையில் செத்து நடிக்கின்றன.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…