கவிதை

நிறங்களாக மாறுதல்

< 1 நிமிட வாசிப்பு

என்னை மென்மையான நிறங்களாக
மாற்றும் கணங்களிடை
அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்
அவை வசித்துக்கொள்ளவென
கோடுகளை அவாவி நிற்கின்றன
எனது ஆடையில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தினுள்
அத்துமீறி புகுர எத்தனிக்கிறது
அதற்கு உகந்த கோடுகளை
உடன் வரைந்து கொடுக்க
நான் கைதேர்ந்த ஓவியனில்லை
ஹயாவின் சித்திரக் கொப்பியைத்
திறந்து பார்க்கிறேன்
எல்லாச் சித்திரங்களுமே
நிறங்களை அணிந்திருந்தன
சிதறிக் கிடக்கும் நிறங்கள் ஓய்வெடுக்க
தோதான கோடுகளின்றி அவதியுற்றன
இறுதியில் அறைச் சுவரில்
ஹயா எப்போதோ கிறுக்கி வைத்திருந்த
சிக்கலான கோடுகளினுள்
இடம் பிடித்துக்கொண்டன
அது தொலைந்துபோன
ஹயாவின் கரடி பொம்மையின்
சாயலை ஒத்திருந்தது
இப்போது மகவின் கோடுகளைப் பூரத்தி செய்த
எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்
நிறங்களாக வசிப்பதென்பது
அத்துணை கொடுப்பினை மிகுந்தது
அது எல்லோர்க்கும் வாய்ப்பதுமில்லை

ஜமீல்

இலங்கையைச் சேர்ந்த இவர் 1990களிலிருந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதுவரை ஏழு கவிதைப் பிரதிகளை வெளியீடு செய்திருக்கிறார். அவரது பிரதிகளுக்கு விருதுகளும் சான்றுதல்களும் கிடைத்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு மதுரை நகரில் ’தாளில் பறக்கும் தும்பி’ நூலிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய்ப் பரிசும் கேடயமும் பெற்றுக் கொண்டதனைத் தனது எழுத்திற்குக் கிடைத்த அதியுன்னத அங்கிகாரமாகக் கருதுகிறார். ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம் 2018இல் வரவிருக்கின்ற பிரதியாகும்.

View Comments

Share
Published by
ஜமீல்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago