செக்குமாடு போலச் சுற்றிச் சுற்றி வருகிறேன்.
இருக்கும் ஒன்றிரண்டு புலன்களைப் பாதுகாத்து
பார்ப்பதையும் கேட்பதையும்
சொல்லும் ஒற்றுவேலை தவிர
பெரிதாக ஒன்றும் இல்லை.
இத்தோடு நான்கு ஆயிற்று.
பளபளக்கும் அகன்ற கரங்களை விரித்தபடி
வேகமாக ஆடியபடி அவர்களும் வலம் வருகிறார்கள்.
ஒருத்தி காலையும் மாலையுமாக இருமுறை கடக்கிறாள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும்
அவர்களைத் தாண்டும்போதும்
படபடப்புடன் செய்தி அனுப்புகிறேன்.
இதுவரை மறுமொழி ஏதும் இல்லை.
என் மொழி புரியவில்லையா?
மிகவும் கவிதைத்தனமாக இருக்கிறதா?
அல்லது கள்ளப் புலனைந்தும் கடந்தவர்களா?
மெள்ள மெள்ள ஓர் ஆமை போல அடங்கிக்கொண்டிருக்கிறேன்.
என் பேச்சு கொஞ்சம் குழறுகிறது.
பார்வையும் மங்கல்தான்.
வேலை முடிந்ததும் நானே என் சுடரை அணைத்துக்கொள்வேன்.
அதற்குள் ஒரு நாளேனும்…
ஒரே ஒருமுறையேனும்…
அருகில் தெரிகிறாள் நிலா.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
எனக்கு உத்தரவு வருகிறது.
அன்றைய சேகரங்களை அனுப்பிவிட்டு
எனது ஒளிப் பலகைகளைத் திருப்பிக்கொள்கிறேன்.
22000 மைல்களுக்கு அப்பால்
நீலப்பந்தாகத் தெரிகிறது பூமி.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…