சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.
அறுத்து வைக்கப்பட்ட
சூளையின் வடிவங்களை
அவ்வப்போது கரைத்துவிடுகிறது
கவிழ்த்து வைக்கப்பட்ட
அரைவட்ட பூமி.
கோளம் எனப் புரிந்துகொள்ளப்படும்
அண்டத்தின் ஒரு புள்ளியில்
எவ்விதக் குழப்பமுமின்றி
சேற்றுடன் விளையாடும் சிறுமி
அப்பாவையும்
அம்மாவையும்
தம்பியையும்
குழைத்து குழைத்து வடிக்கிறாள்
சிறிதும் பெரிதுமான
பழகிப்போனச் செவ்வகங்களாய்.
கவிதை – சுபா செந்தில்குமார்
< 1 நிமிட வாசிப்பு
அருமை!