Categories: கவிதை

எம்.கே.குமார் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

வானவில்லின் மடிப்புக்குள் நினைவுகளோடு உருளுகிறேன்
நினைவுப்புதைகுழி அழுத்தும் மணலில்
தூவித் தெறிக்கிறது ஒற்றைக்காம்பு
எழுந்து நிமிர்ந்து பார்த்தவள்
கட்டைவிரலால் எத்துகிறாள்
இன்னும் கொஞ்சம் சிறுமணலைக் கண்களின்மீது
சூறைக்காற்றில் சுழலும் அவள் சிலந்திவலைக் கூந்தலைத் துழாவுகிறேன்
இந்திரிய மணம் பெற்று எழுச்சியுறுகிறாள் அவள்
புதைகுழியில் கண்கள் பார்க்க என்னை நோக்கி ஓடி வருகிறாள்
எட்டிப் பிடித்தாள் காற்றின் கிளையை
பறந்தோடிய அவள் கீழாடையைப் பிடித்துகொண்டு எழும்ப முயன்றேன்
எட்டி என் தலையை உதைத்தவளின்
இடுப்பு கரிய மிருகம் கண்ணைச் சிமிட்டுகிறது
அதன் ஒரு முனையில் கயிறு இறுக்க
மறுமுனையில் நான் இறுக..

மறையும் வானவில்லில்
நினைவுப் புதைகுழி உமிழ்கிறது இருகுமிழிகளை..


343m/s

என் காதலறி என் காதலியே..
அகம் இழுத்து மெய்யழித்து
ஏந்துவாய் என் செப்புவாய்
முத்துச்சிப்பிவாய்
உயிர் திறக்கும் நுதலொற்றி உயிர் கேட்கும் இதழொற்றி
இச்சவம் கேட்கும் முச்சுவையை காதல் அச்சுவையை
உன் அகவாய் தரும் இகவாய்
மன நெகிழ்வாய் செப்புவாய் செப்புவாய் என் காதலியே..

போதும்…

என்னைவிட்டுப் போகிறாயா
இனிமேல் நாம் சந்திக்க மாட்டோமா
நினைவிலுறும் பழஞ்சொல்லைக் கேட்க வேண்டாமா
இதுதான் உன் கடைசி வார்த்தையா
கண்களை மூடிக்கொள்கிறேன்
காதுகளைச் சாத்திக்கொள்கிறேன்
உயிரை இங்கே நிறுத்திக்கொள்கிறேன்
இனி இது ஓடாது தேடாது உணராது
காட்டு என் கடைசிச்சொல்லை..
இது நான் இது அவன் இது எவனோ..
காற்றில் பரவி நிற்கும் சொற்களை அறி!
காலமற்று கர்வமற்று
உனக்கானது உனக்கு… எடுத்துக்காட்டுக என் இறுதிச்சொல்லை…

ஹே ராம்
தேவனே என்னை ஏன் கைவிட்டீர்
அஸ்வத்தாம ஹத
உன் தர்மங்களையும் பாபங்களையும் எண்ணாது
அவைகளை விட்டுவிட்டு
கலங்காது என்னைச் சரணடை!

நகரும் காற்றைத் துழாவுகிறேன்
எந்தச் சொல் என் சொல்?
எங்கே நீ.. உன் சொல் எங்கே
காற்றில் தவழ்ந்து விழுகிறது இந்தச் சொல்
காலம் கடந்து அலையும் இன்னுமொரு அலைவரிசையில்!

எம்.கே.குமார்

'மருதம்' (2006), 5.12pm (2017) என்ற சிறுகதைத்தொகுப்புகளும் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' (2013) என்ற கவிதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் 'நதிமிசை நகரும் கூழாங்கற்கள்' (2014) நூலின் தொகுப்பாசிரியர். “பசுமரத்தாணி” என்னும் குறும்படத்தின் இயக்குநர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'கண்ணதாசன் விருது' (2017), தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது (2017), காலச்சுவடு சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workpalce Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றவர். இவருடைய சிறுகதைத்தொகுப்பு 5.12pmக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (மெரிட்) 2018இல் வழங்கப்பட்டது.

View Comments

  • இதில் நம் படைப்புகளை வெளியிட என்ன செய்ய வேண்டும்

Share
Published by
எம்.கே.குமார்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago