நீல நிறக் கண்கள்

கடுவன் காடு / கடுவன் ‘கடுவன் காடு தெங்குலூங் மலையோடு சேர்ந்து விரிந்து பத்து டுவா, பத்து தீகா, பட்டாணி வயல், செலாயாங், ஹூத்தான் திங்கி, மலாயா லாமா என்கிற பகுதிகளைச் சுற்றி அடர்ந்திருக்கும் பெருங்காடு. 2018 ஆம் ஆண்டில் மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டு சுற்றி இராணுவப் படைகளும் பாதுகாப்பு அரண்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’ 2016 ஜூன் 20 இடப்பக்கம் தெரிந்த வெட்டுமரக் காட்டைக் கடந்தால்தான் துரைசாமி மாமாவை நெருங்கிச் […]

உவன்

மங்கிய பீச் பழத்தோலின் நிறத்திலிருக்கும் சிறுவன் உவன். உவனின் வீடு இளம்பச்சைச் சுவர்களையும், பழுப்பு கதவு ஜன்னல்களையும், அடர் சிவப்புக் கூரையையும் கொண்டிருந்தது. அந்தக் கூரையின் பக்கவாட்டிலிருந்த புகைப்போக்கி, சிக்கலாகிவிட்ட கம்பியைப் போலச் சுருண்டு செல்லும் புகையை எந்நேரமும் கக்கியபடி இருந்தது. உவனுடைய வீட்டிற்கு முன்னால் இருந்த செங்கற்படிகள் சிதைந்திருந்தாலும், வெப்பச் சலனங்களால் விரிசல் விட்டு, நாளடைவில் துண்டுகளாகி மண்ணில் புதைந்து தட்டையாகிவிட்டிருந்த அதன் கற்கள் உவன் தவ்விக் குதிக்க ஏதுவானதாய் அமைந்திருந்தன. உவனது வீட்டுக் கூரையின் […]