அறிவிலுமேறி அறிதல் – 2: சொல்லாதிருத்தல் இல்லாதிருத்தல்

2 நிமிட வாசிப்பு

‘இந்த கவிதை
ரொம்பவும் எளிமையானது
ஒன்றும் சொல்லாதிருக்கிற
ஒன்றும் இல்லாதிருக்கிற எளிமை

எனது எளிமையோ
இல்லாமையின் இருப்பை
சொல்லாமையின் சொல்லைச்
சுமந்து திரிவது’

என்கிறார் அபி.

ஒன்றும் சொல்லாதிருக்கிற, ஒன்றும் இல்லாதிருக்கிற இதன் எளிமையை எங்ஙனம் அறிவது?

அனுபவம் ஆதியில் ஒன்னிரிக்கில் அல்லாதெ
அனுமிதி இல்இது முன்னம் அக்ஷியாலே
அனுபவியாததுகொண்டு தர்மியுண்டென்
அனுமிதியால் அறிவீலறிண்ணிடேணம்

Without prior experience there is no inference;
This is not previously perceived with the eye;
Therefore, know that the existence of that in which all qualities inhere
Is not known by inference [1]

அனுமானத்தால் அல்ல, மெய்யனுபவம் வழியாகவே அதை (பிரம்மத்தை) அறிய முடியும் என்கிறார் நாராயண குரு.

‘…தனக்குள் ஏற்கனவே இருப்பவற்றையே வாசகன் சுரணை காண்கிறான். ஆனால், கவிதையிலிருந்துதான் தனக்கு அந்த அனுபவம் தனக்குக் கிடைத்தது என நம்புகிறான். கவிதை, தன் அனுபவத்தைத் தூண்டும் ஒரு தூண்டல் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அனுபவம் அவரவரிடம் இருப்பது. ஒருவருடையது இன்னொருவருக்குப் போகாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கவிதை பொருள் தருவதில்லை, அது கவிதையாக இருப்பது என்பது’ [2]

இதுவல்ல இதுவுமல்ல இதுவுமல்ல என்று நிராகரித்தல் வழியாகவும், இதுதான் இதுதான் என்று ஏற்பதன் வழியாகவும் நாம் அறிகிறோம்.

இருத்தல்

இருப்பதொன்றே
முடிவற்றது
போவது என்றால்
தவிர்க்க முடியாதது
முடிவு

‘போதலை நிறுத்திவிட்டால்
இருத்தலாகும்’
எனக்கேட்டு,
நிறுத்த,
அது வெறும்
போதலில் இருத்தலேயானது

இருத்தலைத் தேடிப்
போவதென்றால்
இறுதியில் அதைப் பிடிக்கலாமோ?

ஆனால்
எதன் முடிவுமன்று இருத்தல் என்பதால்
போதல் வீண்

இருப்பவர்களை விசாரித்தால்:

இருத்தலில்
எது செய்கிறீர்கள்?

எது செய்வதும்
இருத்தலாகாது
இருத்தலில் போதலாகிவிடும்

இருத்தலினுள்ளே
என்ன இருக்கிறது?

எதுவுமில்லை
இருந்தால்
இருத்தல் இயக்கம் காட்டும்
இயக்கம் இருத்தல் அல்ல
போதல்

பின் இருத்தல் என்னதான்?

இல்லாதிருத்தலே
இருத்தல்

(அபி)

அறிவது தர்ம்மியெயல்ல தர்மமாம் ஈ
அருளிய தர்ம்மி அதிருசியம் ஆகயாலே
தர முதலாயவ ஒன்னும் இல்ல தாங்குன்ன
ஒரு வடிவாம் அறிவு உள்ளது ஓர்த்திடேணம்

What is known is not that in which all qualities inhere, only the qualities;
As this, in which all qualities are said to inhere, is not visible
Earth and all else do not exist;
Remember that there is only a form in knowledge which supports [1]

எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்

நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர். [2]

அழலெழும் அஞ்சு இதழ் ஆர்ன்னு ரண்டு தட்டாய்
சுழலும் அநாதி விளக்கு தூக்கி ஆத்மா
நிழல் உருவாய் எரியுன்னு நெய் அதோ, முன்
பழகிய வாசன வர்த்தி விருத்தியத்ரே

Having two tiers of five petals, whence pain arises,
Rotating, beginningless, hangs the lamp of the self,
Burning as the shadow (of true being), with the oil
Of latent urges and mental modifications as the wicks [1]

நம்முள் உறையும் வாசனைகள் (Vasanas) நெய்யூற்றி, மனவிருத்திகளின் திரியில் எரிகிறது ஓர் அனாதி விளக்கு. துயர்மிகு நெருப்பின் இதழ்கள் திரியில் காற்றில் துடிதுடிக்கின்றன. நிழருவாய்க் கிளர்ந்தெழுந்தாடுகின்றன மனம் வனையும் விசித்திரப் பாவைகள்.

‘..புதருக்கு
நெருப்புவைத்து
ஒதுங்கிக் கொண்டேன்
நெருப்பைத்தன் வேரில்
கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்’

வெட்டிச் சாய்ப்போமென
முயன்றபோது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது [2]

வாசனைகள் எரிந்து தீரும்போது, மனவிருத்திகள் அற்ற கணத்தில் ‘திரவமாக ததும்பிய நான்’ ‘என்னிடம் இருந்ததால் என் வடிவில் இருந்த நான்’ வடிவமற்ற கிண்ணத்தில் நிறைபவனாய், அதில் நிறைந்த மதுவை உறிஞ்சி அருந்துபவனாகிறேன்.

வடிவங்கள்

வடிவங்கள்
வழக்கிழந்து விடும்

குறிப்பிட்ட தேடல்
அலுப்பாகி,
‘தேடலினின்றும் விடுதலை’
என்பதில்
திகைத்துச் சுருளும்
அனுபவம்

வடிவங்களை நெருக்கி நிறுத்தி
அதிகாரம் செலுத்திய
போல் போலில்லை இரண்டும்
செத்துப்போகும்

வடிவங்கள் இன்றித்
தொடர்புகள் ஏது
வேய்ந்த தொடர்புகள் நாலாபுறமும்
விலகிட
வெளிச்சம் வியாபிக்க

இதோ

காலம்
கண்ணில்படும்

பரிமாணமற்ற காலத்தில்
நீந்தித் திளைக்கும்
பரிமாணம் விலகிய
பொருள்’கள் [2]


குறிப்புகள்

[1] – ஆத்ம உபதேச சதகம்

[2] – அபி கவிதைகள்

வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்