மருட்சி #1

1 நிமிட வாசிப்பு

கனவுருப்புனைவு புகைப்படங்கள் சாத்தியமா? கேமராவால் நிஜ உலகில் இருப்பதை மட்டும்தான் பதிவு செய்ய முடியும். புகைப்படங்களால் நம்மைக் கற்பனை உலகங்களுக்கு இட்டுச்செல்லமுடியுமா? விஸ்வநாதன் எடுத்த இவ்விரண்டு புகைப்படங்கள் ஒரு சாத்தியத்தைக் காட்டுகின்றன. கற்பனை உலகின் கதவை மட்டும் திறந்துவிட்டு அதற்குள் பயணிக்கும் முடிவை நம்மிடம் விட்டுவிடும் புகைப்படங்கள் இவை.

காக்கோசாரஸ்

 


காத்தாய்

 


நிழற்படம் எடுத்தவரைப் பற்றி

விஸ்வநாதன் பெரும்பான்மை தென்னிந்தியர்களைப் போலவே பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு,  கையில் கேமராவை ஏந்தி மாறுபட்ட பாதையில் தன் தொழில் பயணத்தைத் தொடங்கினார். தனது புகைப்படங்கள் மூலம் நுட்பமாகவும் வேடிக்கையாகவும் கதைகள் சொல்வதில் விருப்பமுள்ளவர். பார்வையாளர்களும் கலைஞரை ஒத்த அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்.
https://www.instagram.com/vvish__/

1 thought on “மருட்சி #1”

  1. காக்கை புகைப்படம் என்னை வெகு நேரம் அசைக்காமல் உட்கார வைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள் தோழர்களே!

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்