நாளையின் நிழல்கள்: கருஞ்சாயை

1 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு கலைஞர்களிடம் எதிர்காலத்தின் சித்திரங்களைத் தீட்டச்சொல்லிக் கேட்கப்போகிறோம். அவர்களின் கனவுகள், அச்சங்கள், தீர்க்கமான பார்வைகள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்த கலவையாக. முதல் படியாக கார்லா வரைந்த நாளைய நிழல்கள் இதோ.


ஓவியரைப் பற்றி

கார்லா சிங்கப்பூரில் வசிக்கும் பொறியாளர். வேலை வாழ்க்கையில் குறுக்கிடாத நேரங்களில், அவர் கலையைத் தேடி, குறிப்பாக பரீட்சார்த்த நாடகங்களுக்கும் கண்காட்சிகளுக்கும் விரும்பிச் செல்வதுண்டு. (இலவச பீர் அளிக்கும் நிகழ்வுகள் இன்னும் சிறப்பு!)

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்