அரூவின் இதயத்துடிப்பு

1 நிமிட வாசிப்பு

பிரசன்னாவிடம் அரூ இதழுக்கு ஓர் இசைத் துணுக்கு உருவாக்கச் சொன்னோம். நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான் ‘அரூ’. இதை இசை மூலம் வெளிப்படுத்த இயலுமா எனக் கேட்டோம். அவர் உருவாக்கிய அரூப இதயத்துடிப்பு இதோ!

இசையமைப்பாளர்களைப் பற்றி

பி.பிரசன்னா சென்னையில் வசிக்கும் ஓர் இசையமைப்பாளர்/இசை ஏற்பாட்டாளர்/இசை தயாரிப்பாளர். மிருதங்கம் கற்றுத் தேர்ந்த இவர், பிறகு இசை அமைப்பில் ஈடுபட்டார். BP Collective என்ற இசைக்குழு அமைத்து தனது சுயாதீன இசைப் படைப்புகளை வெளியிடுகிறார். World, pop, jazz fusion மற்றும் rock இசை வகைகள் இவருக்கு விருப்பமானவை.

பிரஷாந்த் டெக்னோ இசை அமைப்பாளர்/இசை தயாரிப்பாளர்/ கீ போர்ட் வாசிப்பாளர். Madley Blues இசைக்குழுவில் ஒருவராக சுட்டகதை மற்றும் நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தி ஹிந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ் தலைவாஸ், ஸ்டார் விஜய், அமேசான், ஓ எல் எக்ஸ், பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற பலவற்றின் விளம்பரங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்